Saturday 26 July 2014

மோர் குழம்பு

மோர்குழம்பு 


புளித்த தயிர் - 2 டம்ப்ளர்

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - அரை ஸ்பூன்

வர மிளகாய் - 10
தேங்காய் துருவல் - அரை ஸ்பூன்
சீரகம் - சிறிது

சேப்பங்கிழங்கு - 8

உ.பருப்பு - அரை ஸ்பூன்
வெந்தயம் - சிறிது

மஞ்சள்  பொடி- 1/4 ஸ்பூன்  தே. எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவைக்கு

கடுகு, கருவேப்பிலை 

குறிப்பு: தாளிக்க கட்டாயம் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும்.

பூசணிக்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு, சுண்டைக்காய் வத்தல் - இவற்றை போட்டும் மோர்க்குழம்பு செய்யலாம். வடை மோர் குழம்பு, பருப்புருண்டை மோர் குழம்பும் செய்வதுண்டு.


மோர் குழம்பு போல, மோர் ரசமும் செய்யலாம்.


இதனை தயிர் குழம்பு என்றுதான் கூற வேண்டும். புளித்த கெட்டியான தயிரில்தான் செய்கிறோம். ஆனாலும் மோர் குழம்பு என்ற பெயரே நிலைத்து விட்டது. சிலர் மோர் பயன்படுத்தியும் செய்கிறார்கள். ஆனால் குழம்பு கெட்டியாக இல்லாமல் நீர்க்க இருக்கும்.



து. பருப்பையும், க.பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

உ.பருப்பையும், வெந்தயத்தையும் சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்.





ஊறிய பருப்புகளுடன் வறுத்த வெந்தயம், உளுத்தம்பருப்பு, தேங்காய், வர மிளகாய், சீரகம்  இவற்றை சேர்த்து .........










சிறிது தண்ணீர் விட்டு......












மைய அரைக்கவும். அதிக கொரகொரப்பாகவோ  அல்லது அதிக நைசாகவோ  அரைக்க கூடாது.






                                          தயிரை நன்கு சிலுப்பவும். கெட்டியாக மோர்குழம்பு வேண்டுபவர்கள், தயிரை அப்படியே சிலுப்பலாம். மோர்குழம்பு  சற்றே நீர்க்க இருந்தால்தான் பிடிக்கும் என்பவர்கள் அரை தம்ப்ளர் தண்ணீர் சேர்த்து சிலுப்பலாம்.









சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, வில்லை வில்லையாக  நறுக்கி................... 











சிலுப்பிய தயிரில் சேர்க்கவும். 








சிலுப்பிய தயிரில் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் போட்டு................


                                       அரைத்த கலவையை கலந்து விடவும்.



இந்த கலவையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியை போட்டு கை விடாமல் கிளறவும். அசந்தால் அடி பிடித்து விடும்.


                                  ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். புகை வந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு, கருவேப்பிலை போட்டு வெடித்து வரும் போது, குழம்பில் கொட்டி தட்டை போட்டு பத்து நிமிடம் மூடவும்.


சுட்ட அப்பளம் 



மோர் குழம்பு சாதமும்....வாழைப் பூ பருப்பு உசிலியும் 
மோர் குழம்பை சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம், உருளை கிழங்கு வதக்கல், வாழைக்காய் வதக்கல், வாழைக்காய் சிப்ஸ், பீன்ஸ் அல்லது வாழைப் பூ பருப்பு உசிலி  ஆகியவை மோர் குழம்பு சாதத்திற்கு தொட்டு சாப்பிட ஏற்றவை. குறிப்பாக வாழைப்பூ பருப்பு உசிலியும், மோர் குழம்பு சாதமும் சூப்பர் காம்பினேஷன்.

இட்லிக்கு மோர்  குழம்பு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். சுடச்  சுட மல்லிப் பூ போன்ற இட்லியை  தட்டில் போட்டு, மோர் குழம்பில் முக்கி எடுத்து சாப்பிடுங்கள். அருமையான சாப்பாட்டு அனுபவம் கிடைக்கும். சாம்பார் இட்லியை விடவும் உன்னத சுவை கொண்டது மோர் குழம்பு இட்லி.

No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...